செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: நீதி விசாரணை கேட்கிறார் குஷ்பு
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த அறிக்கையை 1 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சதித்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, ஜல்லிக்கட்டு தொடர்பாக பாஜக கடந்த 18 மாதங்களாகப் பேசாதது ஏன் என்றும், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதேபோல, அதிமுகவின் 37 எம்பிக்களும் ஜல்லிக்கட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய குஷ்பு, சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறுவது கண்துடைப்பே என்றும் விமரிசனம் செய்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தியுள்ள அவர், அதிமுக தலைமை செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த அறிக்கையை 1 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications