கொலைக்கு போலீசை மட்டும் குறை சொல்லாதீங்க... மக்களும் துணிச்சலா போராடனும்- குஷ்பு
சென்னை: எங்கு கொலை நடந்தாலும் போலீசை குறை கூறாமல் மக்களும் துணிச்சலாக களத்தில் இறங்கி போராட வேண்டும் அன்றைக்குத்தான் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் குஷ்பு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்மநபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் சுவாதி. கொலையாளி யார் என்பது குறித்தோ, கொலைக்கான காரணம் குறித்தோ இதுவரை போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவரவில்லை.

சுவாதியின் மரணம், அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜா ஆகியோர் சுவாதி வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று சூளைமேட்டில் உள்ள சுவாதியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் பேசி ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, சுவாதியின் கொலை குறித்து சமூக வலைதளத்தில் விருப்பம் போல் எழுதுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. இது அரசு கையிலும், போலீஸ் கையில் மட்டும் இல்லை. மக்களின் கையிலும் உள்ளது என்றார். பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு உதவ யாரும் வராதது வேதனைக்குரியது என்று கூறிய அவர், கொலை நடக்கும் இடத்தில் போலீஸ் மட்டும்தான் வந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்காமல் மக்களும் களத்தில் இறங்கி போராட வேண்டும். அன்றைக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications