அப்படி ஒரு ஆனந்தம்.. நடிகர் விஜய்யை பார்த்த உற்சாகத்தில் துள்ளி குதித்த பெண்மணி.. மேடையில் கலகலப்பு!
நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது ஒரு பெண்மணி, விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து உற்சாகமானார்.
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண பொருட்களை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திடீரென காலில் விழுந்த ரசிகர்! பதறிய விஜய்.. அடுத்து செய்த சம்பவம்.. கவனம் ஈர்த்த தளபதி - நெகிழ்ச்சி
அப்போது பெண்மணி ஒருவர், விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து மேடையிலேயே உற்சாகமாக ஆடினார். நிவாரண உதவி பெற வந்த பெண்மணி திடீரென உற்சாகமடைந்து ஆடியதைக் கண்டு, விஜய் சிரித்தார். மேடையில் இருந்த புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் சிரிக்க, அந்த இடமே கலகலப்பானது.
அதேபோல, மாணவி நடிகர் விஜய்யின் காலில் விழுந்து தனது செல்போனில் செல்ஃபி எடுத்தார். பின்னர் அவர் நலத்திட்ட உதவி வாங்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். அதற்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வேண்டாமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி எனக்கு வேண்டாம், உங்களது செல்ஃபி மட்டும் போதும் என்று கூறிவிட்டு கிளம்பினார்.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications