வீட்டில் இருந்த பெண்ணைக் கொன்று நகை,பணம் கொள்ளை –திருச்சியில் விபரீதம்
திருச்சி: திருச்சியில் பெண்ணைக் கொன்று நகைகளைக் கொள்ளை அடித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் ஆபிசர் காலனியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் மத்திய பணைக்கலன் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். வைத்தியநாதன் வழக்கம்போல புதன்கிழமை காலை வேலைக்கு சென்றுவிட்டதால், இவரது மனைவி மேரி ரூபணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் மாலையில் வீட்டு பணியாளர் விஜயலட்சுமி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மேரி ரூபணி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து வீட்டு பணியாளர் விஜயலட்சுமி கூறுகையில், எப்போதும் வீடு பூட்டியிருக்கும். நான் வந்தபோது வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார் என்றார்.
போலீசார் இதுகுறித்து கூறுகையில் மேரி ரூபணி அணிந்திருந்த 20 பவுன் நகை காணவில்லை. ஆகையால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். மேரி ரூபணி உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications