குடிகார கணவனிடமிருந்து காப்பாற்ற கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் குடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்யும் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மகாகவி கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் நேற்று மாலை 3 மணி அளவில் தனது மகன், மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மகன், மகள் தலை மீது கெரசின் ஊற்றிவிட்டு, தன்னுடைய தலையிலும் கெரசினை ஊற்றிக் கொண்டார். பின்னர் மகன், மகளுடன் அவர் தீக்குளிக்க முயற்சித்தார்.

உடனே அங்கு காவலுக்கு நின்ற பெண் போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினார்கள். அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி கழுவி விட்டனர். பின்னர் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர், "என் கணவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அவருக்கு நிறைய பெண்களுடனும் தொடர்பு உள்ளது. ஊர்க்காவல் படையில் வேலை செய்யும் அவர் தினமும் போதையில் வந்து என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார்.

தினமும் செத்து, செத்து பிழைக்கும் நாங்கள் ஒரேயடியாக செத்துப்போக முடிவு செய்து இங்கு வந்தோம். ஏற்கனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் போலீசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை நிம்மதியாக வாழவிட வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவரது புகாரின் மீது மேல்கட்ட நடவடிக்கைகாக வேப்பேரி போலீசார் அவரையும், குழந்தைகளையும் அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+