ஆத்தா மகமாயி… 'அம்மா' வெளியே வரக்கூடாதுன்னு கும்பிடுறாங்க: சூட்டை கிளப்பிய குஷ்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயிலை விட்டு வெளியே வர கூடாது என்று அமைச்சர்கள் கோவில் கோவிலாக போய் கும்பிடுகிறார்கள் என்று நடிகை குஷ்பு பேசி சூட்டை கிளப்பி உள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ராணி வெங்கடேசனும், குஷ்புவும் தலைமை தாங்குவார்கள் என்று அறிவித்தாலும் சென்டர் ஆப் த அட்ராக்சன் குஷ்புதான்.

குஷ்புவை பார்க்கவே கூட்டம் அம்மியது.... அவர் பேசியதை கேட்க கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் செல்போனில் படமாகவும், வீடியோவாகவும் எடுத்துத் தள்ளினர்.

அந்த கூட்டத்தில் குஷ்புவை முதல்வர் வேட்பாளராக கிளப்பிவிட்டுள்ளார் திருச்சி வேலுச்சாமி. ஆர்பாட்டத்தில் மைக் பிடித்த குஷ்புவோ, மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக பொங்கித் தள்ளிவிட்டார்.

ஏன் ஆதரவு கொடுத்தாங்க?

ஏன் ஆதரவு கொடுத்தாங்க?

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றும் அன்று பாராளுமன்றத்தில் இடைவேளை கொடுத்திருந்தார்கள். அதுவரை அந்த மசோதாவை எதிர்த்துக்கொண்டிருந்த தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, அந்த அரைமணி நேரத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. அது எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!

பெங்களுரில் நடந்து வரும் வழக்கிற்கும், இந்த மசோதாவை ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. எனக்கு மட்டும் இல்லீங்க. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சந்தேகம் இருக்கு.

நிலத் திருட்டு சட்டம்

நிலத் திருட்டு சட்டம்

உங்களோட அனுமதி இல்லாமல் உங்கள் இடத்தை எந்த நேரமும், எப்ப வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வதற்கு பேர்தான் நில கையகப்படுத்தும் சட்டம். இதனை சட்டம் என்று சொல்லுகிறார்கள். இதற்கு நான் திருட்டு சட்டம் என்று சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்த சட்டம் சில திருத்தங்களுடன் இருந்தது. விவசாயிகளின் நிலத்தை எடுக்க மாட்டோம் என்று சொல்லி இருந்தது. ஆனால் இந்த மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று பேசினார்.

மாறப்போகும் டெல்டா பகுதி

மாறப்போகும் டெல்டா பகுதி

தனியார் நிறுவன முதலாளிகளுக்காக இந்த சட்டத்தை சவுகரியம் செய்து கொடுக்கிறார். இந்தப் பகுதிகளை நாம் டெல்டா பகுதி என்று சொல்லுகிறோம். இது கொஞ்சள் நாள் கழித்து அதானி டெல்டா, மோடி டெல்டா, அம்பானி டெல்டாவாக மாறிவிடும். எல்லையில் போராடுகிற ராணுவ வீரனும், நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் ஒன்றுதான்.

ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்

ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்

46 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் ஒரு ருபாய்க்கு இந்த மோடி, அதானிக்கு கொடுத்துள்ளார். எங்கேயாவது இந்த அநியாயம் நடக்குமா. கருப்பு பணத்தை வெளியில்கொண்டு வந்து தலைக்கு 15 லட்சம் ரூபாய் வங்கியில் போடுவதாக கூறினார். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். ஒரு ஏக்கர் ஒரு ருபாய்க்கு கொடுக்க சொல்லுங்க கொடுப்பீங்களா. ஒரு ஏக்கர் கொடுத்தால் ஒரு கோடி சம்பாதித்து விடுவோம் என்று கூறினார்.

 சிரிப்பு சிரிப்பா வருது

சிரிப்பு சிரிப்பா வருது

தொடர்ந்து தமிழ்நாட்டு எம்.பிக்களை அட்டாக் செய்த குஷ்பு,

நாடு எவ்வளவோ முன்னேற்றத்தில் போய்க்கிட்டு இருக்கு. ஆனால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களை நினைத்தால் ஒரே சிரிப்பா இருக்கு. கேவலமா நினைக்கிறார்கள்.

அம்மா படத்தை கும்பிட்டு

அம்மா படத்தை கும்பிட்டு

பேசப்போற திட்டங்களையும், அறிக்கைகளையும் வைக்க வேண்டிய டேபிள் மேல, படத்தை வைக்கிறார்கள். அந்த படத்தை கும்பிட்டு பேச ஆரம்பிக்கிறாங்க. கேட்டால் அம்மா படம் என்கிறார்கள். அம்மா படம் என்றால் வீட்டல் வைக்க வேண்டியதுதானே என்று அங்க இருக்கக் கூடிய அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஏன் கும்புடுறாங்க தெரியுமா?

ஏன் கும்புடுறாங்க தெரியுமா?

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, அவருக்கு தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாக தண்டனையில் இருந்து விடுபட வேண்டும் என்று கும்புடுறாங்க. நான் நினைக்கிறேன், ஐயா சாமி இனிமே தயவு செய்து அவங்க வெளியே வந்திடக் கூடாது. அவங்களை உள்ளேயே இருக்க வையுங்க. அந்த அம்மாவ பாத்தா குனிந்தே நிக்கணும், இப்ப நிமிந்து நிக்கிறோம், அப்படி சொல்லியே அதிமுகவினர் கோயில் கோயிலாக கும்புடுறாங்கன்னு நினைக்கிறேன் என்று ஒரு குண்டை போட்டார்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

குஷ்பு பேசியது கூட பெரிய விசயமில்லை.... அதுவரை குஷ்பு பேசுவதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த திருச்சி வேலுச்சாமி மைக் பிடித்த உடன், காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் குஷ்புதான் என்று ஒரே போடாக போட்டார்.

முகத்திரையை கிழிப்பார்

முகத்திரையை கிழிப்பார்

சினிமாவை காட்டி மக்களை மோசம் செய்தது போதும். அந்த சினிமாவில் இருந்தே வந்த குஷ்பு எல்லாருடைய முகத்திரையையும் கிழிக்க போறாங்க. காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் இவர்தான். குஷ்பு கண்டிப்பாக தமிழகத்தன் முதல்வராக ஆவார் என்று கூறிய உடன் என்னடா இந்த தமிழகத்திற்கும், தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் வந்த சோதனை என்று நினைத்த தொண்டர்கள் கைகளை தட்டோ தட்டு என்று தட்டி தீர்த்தார்கள்.

இந்த தமிழகம் இன்னும் எத்தனை முதல்வர் வேட்பாளர்களை சந்திக்க இருக்கிறதோ தெரியலையே?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+