Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அபகரிப்பு.. கோயில் சொத்தை சூறையாடும் திமுக அரசு.. ஒரே நாளில் தமிழகத்தையே திணறடித்த இந்து முன்னணி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் திமுக அரசை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதேபோல தமிழக கோயில்களில் நடக்கும் உண்டியல் திருட்டுக்கள் குறித்தும் விடாமல் கேள்வி எழுப்பி வருகிறது.

Land Encroachment Hindu Munnani Hindu Front

இதற்கு நடுவில் 2 நாட்களுக்கு முன்பு கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

நிலங்கள்: இது தொடர்பாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி விடுத்திருந்த அறிக்கையில், "அரசு நிலங்களை விட அதிகமான நிலங்களை கிறிஸ்தவ மத ஸ்தாபனங்கள் வைத்துள்ளன. அவற்றில் ஒரு அங்குல நிலத்தை கூட பொது பயன்பாட்டுக்கு அரசு கையகப்படுத்தியது உண்டா? அதேபோல் மசூதிகளின் சொத்தாக கருதப்படும் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க அரசு, தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்து முஸ்லிம்களை கொண்டே நிர்வாகம் செய்ய வைக்கிறது.

இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போகின்றனர். எனவே கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

கோயில் சொத்துக்கள்: கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறோம்" என்று இந்து முன்னணி அறிவித்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததுமே, இதனை நடத்துவதற்காக இந்து முன்னணியினர் அனுமதி பெற்றிருந்தனர்.. ஆனால், நள்ளிரவு திடீரென போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்களாம்.. எனவே, காலை மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அதிரடி கைது: இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் உட்பட 900 பேரை போலீசார் கைது செய்தனர்... இதுபோலவே தமிழகம் முழுக்க, மாவட்ட தலைநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் இந்து முன்னணியினர் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை குறித்து, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் சொன்னபோது:

"தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.

பேருந்து நிலையம்: ஆனால், இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது.

கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. அதனால்தான், கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்.

நள்ளிரவு தடை: ஆனால், நள்ளிரவு திடீரென ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்கள்.. எமர்ஜென்சி காலத்தைக் காட்டிலும் மோசமாக, திமுக அரசின் நடவடிக்கை இருக்கிறது.. தொடர்ந்து ஆட்சி இப்படியே செயல்பட்டால், வரும் காலத்தில் காணாமல் போய் விடும்... இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக நடக்கிறது. இந்து கோவில்களை மட்டும் இடிக்கிறார்கள்.. கோவில் சொத்துகளை காப்பாற்ற வேண்டும்.. வரும் தேர்தலில் இதற்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+