சென்னையில் உயர்ந்துள்ள நிலத்தடி நீர்மட்டம் - கொட்டித் தீர்த்த பருவமழையால்!
சென்னை: சென்னையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் மக்கள் தொடர்பு மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் 145 தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கிணறுகளில் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்ட அளவு மற்றும் நீரில் உள்ள உப்புத்தன்மையின் அளவுகளை கண்காணித்து வருகிறது.

சமீப காலத்தில் வட கிழக்கு பருவமழைக்கு பின்னர் நிலத்தடி நீர்மட்டம் 2.10 மீட்டர் முதல் 10.5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக புழல், பாரிஸ் கார்னர், அம்பத்தூர், அயனாவரம், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, கோயம்பேடு, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 5 மீட்டர் வரை உயர்ந்து இருக்கிறது.
இதுபோல் மற்ற பகுதிகளில் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதே போல் நிலத்தடி நீரில் உள்ள உப்பு தன்மை வெகுவாக குறைந்து உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications