குவியும் கனவாய் மீன்கள்.. படையெடுக்கும் மீனவர்கள்!

By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி குலசேகரப்பட்டிணம் கடற்பகுதியில் அதிக அளவில் கனவாய் மீன்கள் பிடிபடுவதால் மீனவர்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் வெள்ளப்பட்டி சுற்று வட்டார மீனவ கிராமங்களில் உள்ளவர்கள் தூண்டில் மூலம் கனவாய் மீன்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாட்களில் மீன்களின் இனப்பெருக்கத்தை பொறுத்து தருவைகுளம், தூத்துக்குடி, கொம்புத்துறை, சிங்கத்துறை, திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம் பகுதிகளில் கனவாய் மீன்களை பிடித்து வருகின்றனர்.

Large Number of Squit Fishes Are Comes To Kulasekarapattinam Seashore

தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் வெளியூருக்கு மீன் பிடிக்க செல்லும் முன் அந்தந்த பகுதி மீனவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசி அனுமதி பெற்ற பின்னரே மீ்ன் பிடிக்க தொடங்குவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குலசேகரப்பட்டிணம் கடல் பகுதியில் நாட்டு படகு மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் 10 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவிற்கு சென்று கனவாய் மீன்களை பிடித்து வருகின்றனர்.

ஒரு படகில் 15 மீனவர்கள் வரை சென்று வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து வாடகை வேனில் குலசேகரப்பட்டினத்திற்கு வரும் மீனவா்கள் அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 10க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் செல்கின்றனர். பின்னர் ஒவ்வொருவரும் தெர்மகோள் உதவியுடன் படகுலில் இருந்து தனிதனியாக கிளம்பி தூண்டில் உதவியுடன் மீனை பிடித்து படகில் சேர்த்து கரைக்கு திரும்புகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Large number of Squit fishes are comes to Kulasekarapatinam seashore. Fishermen have begun to grab it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற