குட்கா விவகாரத்தில் பதிலளிக்க கால அவகாசம்... திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு?
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு விடுக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிகிறது.
சென்னை: சட்டசபையில் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் அளிக்க உரிமைக்குழுவிடம் அவகாசம் கோருவார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட களஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர்.

உரிமைக்குழு ஆலோசனை
இந்நிலையில் உரிமைக் குழு தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதிமுக தரப்பில் 7 உறுப்பினர்களும், திமுக தரப்பில் 5 உறுப்பினர்கள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பங்கேற்றனர். உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
இந்த கூட்ட முடிவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. ஆனால் இன்றுடன் உரிமைக்குழு அளித்த கெடு முடிகிறது.

எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
இந்நிலையில் உரிமைக்குழுவிற்கு பதிலளிக்க காலஅவகாசம் கோராலாமா அல்லது என்ன மாதிரியான பதில் அளிப்பது என்று மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட 21 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருப்பு?
ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் குட்கா விவகாரத்தில் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே நீதிமன்றத்தின் உத்தரவிற்காக திமுக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
உரிமைக் குழு நோட்டீஸ் மீது பதிலளிக்க திமுக கால அவகாசம் கேட்கிறது?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications