இன்றுதான் ஜெயலலிதாவை தமிழகம் கடைசியாக உயிரோடு பார்த்த நாள்!
தமிழகத்தின் இரும்பு பெண்மணி என கூறப்படும் ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில் மெட்ரோ ரயில் நிலைய தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
Recommended Video

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனப்படும் சகாப்தம் கடந்த ஆண்டு இதே நாளில் நம்முடன் இருந்த நிலையில் அவர் தற்போது இல்லை என்பதை நினைக்கும் போது அதிமுகவினரின் நெஞ்சம் பதைபதைக்கிறது.
பன்முக திறமை கொண்ட ஜெயலலிதா தமிழகத்தில் இரு முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றினார். அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகம், ரூ.10 க்கு குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் ஏழைகள் மூன்று உணவு உண்ணவும், தாகத்துக்கு தண்ணீர் பருகவும் வித்திட்டது.
இதுமட்டுமல்லாமல் இலவச மடிக்கணினி, தாலிக்குத் தங்கம், இலவச சைக்கிள், இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தினார். இன்றும் ஏழைகளின் வீடுகளில் அன்றாடம் அடுப்பெரிகிறது என்றால் இலவச அரிசி திட்டம் அதற்கு முக்கிய காரணம்.

இன்று கடைசி நாள்
இத்தகைய சாதனைகளுக்கு சொந்தகாரரான ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே தினத்தில் சென்னையில் மெட்ரோ பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிய நாள் இன்று ஆகும். இதற்கு அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 22ம்தேதி ஜெயலலிதா உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

75 நாள்கள்
சுமார் 75 நாள்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் கடைசியாக உயிரோடு மக்களால் பார்க்கப்பட்ட இந்த தினத்தை எண்ணி அதிமுகவினர் கண் கலங்கி வருகின்றனர். இது குறித்து டுவிட்டரில் மக்கள் தங்கள் வருத்தங்களை பகிர்ந்துள்ளனர்.
|
கடைசி நாள்
எங்கள் தலைவியின் கடைசி நிகழ்ச்சி
நாளையுடன் ஒரு வருடமாகிறது
தமிழகம் உங்களைப் பார்த்து...
|
உலகம் பார்த்த நாள் இன்று
இந்த உலகம் உங்களை கடைசியாக பார்த்த நாள் இன்று 😢😢😢
|
கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி
ஜெயலலிதா கடைசியாக கலந்து கொண்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவின் அழைப்பிதழ்.
|
மிகப் பெரிய வெற்றிடம்
இரு சகாப்தங்களை இழந்துவிட்டோம். இதனால் ஏற்பட்டது மிகப் பெரிய வெற்றிடம்.
|
சிங்கமாக இறங்கிய தருணம்
கடைசியாக பாசத்தாய் வாகனத்தில் இருந்து சிங்கமாக இறங்கிய தருணம்..
மறக்க முடியுமா..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications