தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை கூடிப்போச்சு... சட்டம் ஒழுங்கு சரியில்லை: ஸ்டாலின்
சென்னை: ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொலைகள் அதிகரித்து வருகிறது என்று திமுக பொருளாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கொளத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, 6 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.5000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

மேலும் 6 பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, கடந்த இரு மாதத்தில் தினசரி கொலை, கொள்ளைகள் நடைபெற்று, சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டார். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications