சென்னை: எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் படுகொலை- 2 பேர் கைது
சென்னை: சென்னையில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் நள்ளிரவில் வெட்டிக் படுகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நேற்று பரபரப்புடன் நடந்தது. தலைவர் பதவிக்கு சந்தன் பாபு மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். எழும்பூர் வக்கீல் சங்க தலைவர் பதவி ஒரு வருடமாக இருந்தது. இந்த வருடம் முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 948 ஓட்டுக்களில் 900 ஓட்டுக்கள் பதிவானது. மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இரவோடு இரவாக ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததால் முடிவை அறிவதற்காக நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் திரண்டு நின்றனர்.

இரவு 7 மணியளவில் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து கலைந்து சென்றார்கள்.
நள்ளிரவு 1 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டது. 386 வாக்குகள் பெற்று சந்தன்பாபு தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட மைக்கேலுக்கு 360 வாக்குகள் கிடைத்தது.
வெற்றி கொண்டாட்டம்
சந்தன்பாபு தலைவராக வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். சந்தன்பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். பட்டாசு வெடித்தனர்
மோதல், தாக்குதல்
அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. வெற்றி பெற்ற சந்தன் பாபுவை அவரது ஆதரவாளர்கள் தோளில் தூக்கியபடி ரோட்டுக்கு வந்தனர். அப்போதும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
வழக்கறிஞர் படுகாயம்
கல், இரும்பு கம்பி, கத்தி ஆகியவற்றால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டாலின் (38) என்ற வழக்கறிஞர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை பொதுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்க தேர்தலில் நடைபெற்ற மோதலில் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே வழக்கறிஞர் ஸ்டாலினை கொன்றவர்களை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை தொடர்பாக இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications