சிரிப்பும் அழுகையுமான ஒரு காமெடி!- Special Report 3

Subscribe to Oneindia Tamil

-நமது சிறப்பு நிருபர்

பணம் சம்பாதிப்பது எதற்கு செலவு செய்வதற்குத்தானே? ஆனால் சில பிரபலங்கள் செலவே செய்ய மாட்டார்கள். கடைந்தெடுத்த கஞ்சனாக இருக்கும் கோடீஸ்வர்ர்கள் சினிமாவிலும் உண்டு. அப்படி ஒரு கருமி கையில் தேள் கொட்டுவது போல் முழிப்பது தான் இந்த ஸ்டோரி.

அந்த பிரபல காமெடியன், தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கட்டு கட்டாக அருணாச்சலம் படத்தில் காண்பிப்பது போன்ற ஒரு ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருப்பார் என்பது பல காலமாக உலா வரும் ரகசியம். அவரது முன்னாள் பார்ட்னர் காமெடியன் முடிந்தவரை எல்லா இடங்களிலும் இதைப் பரப்பி வைத்துள்ளார்.

Leading Comedian in tears - special report

இந்த 'நோட்டு மலை' ஏரியாவில் குடும்பத்தினருக்குக் கூட அனுமதி இல்லையாம். எப்போதெல்லாம் மூட் அவுட் ஆகிறாரோ அப்போதெல்லாம் அந்த அறைக்குள் நுழைந்து கட்டுகளைப் பார்த்து ஆறுதல் அடைந்துகொள்வாராம்.

இந்த நிலையில்தான் அந்த மோடிமஸ்தான் அறிவிப்பு வர, அந்த நேரம் பார்த்து மகளின் திருமணத்தில் பிஸியாக இருந்தவர் நொறுங்கிப் போய்விட்டாராம். நடிகரின் இயல்பு தெரிந்த குடும்பத்தினர் உள்ளுக்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவி மனுசன், நம்மளுக்காவது கொஞ்சம் கிள்ளியாவது கொடுத்திருக்கலாமே.. இப்போ எல்லாம் வெறும் பேப்பராப் போச்சே என்று மாய்ந்து கொள்கிறார்களாம்.

அண்ணன் இருக்கும் அறையிலோ இருந்து சிரிப்பும் அழுகையும் சத்தமாக மட்டும் மாறி மாறி கேட்கிறதாம். நிலைமை புரிஞ்சதால நமக்கும் பரிதாபமாகத்தான் இருக்கு. பாவம், கண்டெய்னரில் வந்த பங்கா என்ன... கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்தானே... ஆறுதலடைஞ்சி வரட்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+