புதுச்சேரி, நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. திருவாரூர், திருப்பூரில் பள்ளி மட்டும்
புதுச்சேரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கன மழையை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருப்பூர், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி வருவதால், கடந்த 2 தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. ஏராளமான மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக வெள்ள நீர் சாலைகளில் ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

பலத்த மழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், நாகை, திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நாளையும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருப்பூர், நீலகிரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இடைவிடாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications