தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறீர்களா.. லீவ் பணம் குறித்து மத்திய அரசு ஹேப்பி உத்தரவு
சென்னை: தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு விடுப்பிற்கான பணம் பெறுதலுக்கான (leave encashment) வரம்பில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்பு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும்போதோ அல்லது ஒய்வு பெறும்போதோ, leave encashment செய்து பணம் பெற்றால், ₹3 லட்சத்திற்கு மேல் வரும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும். தற்போது, இந்த வரம்பு ₹25 லட்சம் வரை அதிகரிக்கப் பட்டுள்ளது.

அதாவது, வேறு நிறுவனங்களுக்கு மாறும்போதோ அல்லது ஒய்வு பெறும்போதோ, leave encashment செய்து கிடைக்கும் தொகைக்கு ₹25 லட்சம் வரை நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இந்த அறிவிப்பு, கடந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுதுதான், அதற்கான ஆணை வந்துள்ளது.
இது FY 2023-24 (ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருமென்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீங்கள் பணியில் இருக்கும்போது செய்யும் leave encashment அனைத்தும் வருமான வரி வரம்பிற்குள் வரும். இதை கவனத்தில் வைக்கவும். resignation மற்றும் retirement போது செய்யும் encashment க்கு மட்டும்தான் வரி இல்லை.

ஏப்ரல் 1, 2023 க்கு பிறகு நீங்கள் ஒய்வு பெற்றிருந்தாலோ அல்லது நிறுவனம் மாறியிருந்தாலோ, உங்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பிடிக்கப்பட்ட தொகையினை திரும்பப் பெற முயற்சி எடுக்கலாம்.
அதற்குள் அவர்கள் உங்களது வரியினை அரசாங்கத்திற்கு செலுத்தியிருந்தால், அதனை மறக்காமல் Form-16ல் பதிவு செய்யும்படி கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு ITR file செய்கையில், இதனை refund ஆகப் பெறலாம். இந்த தகவலை நிதி நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications