பயங்கரவாத இயக்கங்களை வளரவிடுவது எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம்.. வரிந்துகட்டும் பொன் ராதாகிருஷ்ணன்!
பயங்கரவாத இயக்கங்களை வளரவிடுவது எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பயங்கரவாத இயக்கங்களை வளரவிடுவது எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பயங்கரவாத இயக்கங்கள் தமிழகத்தில் காலூன்றியிருப்பதாக நான் பலமுறை கூறி வருகிறேன்.
தமிழக மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்கள் தமிழகத்தில் காலூன்றியிருப்பதாக நான் பலமுறை கூறிவருகிறேன்.

போராட்டம் சாதாரணமானதா?
பயங்கரவாத இயக்கங்களால் ஏற்படும் விளைவை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது. போராட்டம் சாதாரணமானதா? சதித்திட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சர்வ அதிகாரத்தையும்
தமிழகத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். இவர்களை ஒடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.

ஊடகத்திலும் ஊடுருவல்
நக்சலைட், மாவோயிஸ்ட்கள், பயங்கரவாதிகள் பல அமைப்பில் ஊடுருவியுள்ளனர். ஊடகத்திலும் ஊடுருவியிருக்க வாய்ப்பு உள்ளது. பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக விட்டால் எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம்.

போலீஸ்க்கு முழு சுதந்திரம்
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தவுடன் நக்சல்களை விரட்டினார். இதற்காக போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசு தேவையில்லை.

முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும்
6 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு தான் வேண்டும். எம்ஜிஆர் வழியில் செயல்படுவதாக கூறும் தற்போதைய அரசும் போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications