அதிமுக அணியில் இருந்து விலகல்- இடதுசாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் விலகுவதாகவும் இரு இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இடதுசாரிகளுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சித் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் இடதுசாரி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை முறியடிப்பதற்கு, தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிடுவதென முடிவு செய்தோம். இதற்காக நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் அஇஅதிமுகவின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் 40 தொகுதிகளுக்கும் அஇஅதிமுக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தனித்தே துவங்கிவிட்ட சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இடதுசாரிக் கட்சிகள் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications