இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவன சொத்துகள் கபளீகரம்- நடந்தது என்ன? கலை இலக்கிய பெருமன்றம் விளக்கம்!
சென்னை: இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவனத்தின் (New Century Book House) சொத்துகள் விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. NCBH புத்தக நிறுவன பங்குகள் கபளீகரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆய்வாளர் எனப்படுகிற எஸ்.வி.ராஜதுரை வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பெரும் சர்ச்சையானது.
NCBH புத்தக நிறுவன சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் அறம் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் எஸ்.வி.ராஜதுரை, என்.சி.பி.ஹெச் நிறுவனம் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என்.சி.பி.ஹெச் நிறுவனம் தமிழகத்தில் இடதுசாரி சிந்தனைகளை, தத்துவங்களை, மார்க்சிய ஆய்வுகளை, புதினங்களை பல்வேறு புத்தகங்கள் வடிவில் தமிழ் பேசும் உலகிற்கு கடந்த 72 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இதனோடு அம்பேத்கர், பெரியார் சிந்தனைத் தொகுப்புகளை தமிழ் மக்களுக்கு வழங்கிய முற்போக்கு ஞான ரதமாகும்.
அந்தக் கட்டுரையில் என்.சி.பி.ஹெச் குறித்த விவரங்களை நிர்வாக இயக்குனர் சண்முகம் சரவணன் அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதுவதாக அறிவித்து எழுதியுள்ளார்.

கட்டுரையில் ரிட் மனுவில் கூறாத பல தகவல்களை நேரடியாக கண்டது போன்று,குற்ற புலனாய்வு எழுத்தாளர் போல எழுதியுள்ளார். நிர்வாக இயக்குனர் எங்கு,யார் பாதுகாப்பில் பதுங்கியுள்ளார், யார் மூலம் தனக்கு தகவல்களை தெரிவிக்கிறார் என்பதை மட்டும்
கூறவில்லை.
என்.சி.பி.ஹெச் நிறுவனம் 1951ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களால் மாநிலம் முழுவதும் வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தும் போது குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்து நடத்துவதாக பதிய வேண்டும் என்ற காரணத்திற்காக கட்சி,கட்சிக்காக மிகச்சிறந்த பணியாற்றிய 5 முழு நேர ஊழியர்களை தேர்ந்தெடுத்து, கட்சி வசூலித்த பணத்தை அவர்களின் பெயரில் செலுத்தி, அவர்களை பங்குதாரர்கள் ஆக்கியது.
பல்வேறு காரணங்களுக்காக அந்தப் பங்குகள், அடுத்தடுத்து வரும் இயக்குனர்கள், நிர்வாக இயக்குனர்கள், சேர்மன் பதவியில் இருக்கும் தோழர்களுக்கு பங்குகள் மாற்றப்படுவது வழக்கமாக இருந்தது. 1992 முதல் இயக்குனர் ஆகவும், சேர்மன் ஆகவும் தமிழகத்தின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு பதவி வகித்து வருகிறார். சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்து தஞ்சைக் கிளையின் மேலாளராக உயர்ந்து, 2016 முதல் நிர்வாக இயக்குனராக பதவிக்கு வந்த சண்முகம் சரவணன் அவர்கள் திட்டமிட்டு, சதி வேலை செய்து பெரும்பாலான பங்குகளை சேர்மன் பெயருக்கு மாற்றி, அதன் பின்னர் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
இது கடந்த 72 ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்கா கட்சித் தோழர்கள், தங்கள் தோள்களிலும், முதுகுகளிலும், அரை பட்டினியோடு புத்தகப் பொதிகளை தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தூக்கிச் சென்று விற்பனை செய்து, சிறுக, சிறுக சேமித்த கட்சி சொத்தை, திட்டமிட்டு, சதி செய்து, மோசடி செய்து திருடுவதாகும். உண்மை இவ்வாறு இருக்கும் போது, இடதுசாரிகளின் மத்தியில் மார்சிய அறிஞராக வேடமிட்டு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோழர் ஜீவானந்தம்,தோழர் சிங்காரவேலர் போன்ற தோழர்களை இழிவுபடுத்தி எழுதி வரும் திரு எஸ்.வி.ராஜதுரை அவர்கள், கட்சி சொத்தை சுருட்ட முயற்சிக்கும் சண்முகம் சரவணன், அவருக்கு உதவி செய்த பொது மேலாளர் ரத்தினசபாபதி ஆகியோர்க்கு ஆதரவாக 'இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் சிபிஐ' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார்.
'தமிழகத்தின் மூத்த குடிமக்களில் ஒருவரும்,பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படுபவரும்' என தோழர் நல்லகண்ணு அவர்களை பகடி செய்துள்ளார்.
கட்சி சொத்தை ஒரு தனிநபர் அபகரிக்க நினைக்கிறார் என்பதை அறிந்து, இதை எப்படியும் மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆவலோடு, தேசிய அளவில் தன்னுடைய பணிகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, தமிழகம் வந்து, அந்த சதிகாரர் சண்முக சரவணன் இருக்கும் இடத்திற்கு நேரே சென்ற மதிப்புமிகு தோழர் டி.ராஜா அவர்களை 'நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத கட்சிக்காரர்களில் ஒருவர்' என சிறுமைப்படுத்தி உள்ளார்.
நீண்ட நெடுங்காலமாக நிலவி வரும் சிபிஐ-சிபிஎம் ஒற்றுமையை என்.சி.பி.ஹெச் நிறுவனத்தை முன்னிறுத்தி குலைத்து விடலாமா என, கம்யூனிஸ்ட் ஒற்றுமையை சிதைக்கும் புதிய இடதுசாரிகள் போன்று முயன்றுள்ளார்.

தோழர் நல்லகண்ணு, சண்முகம் சரவணன் மீது அளித்த மோசடி புகார் குறித்து தமிழக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை, திமுக,சிபிஐ உறவு காரணமாக எடுப்பதாக ஒரு கற்பித்தத்தை உண்டு பண்ணி, மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக கூட்டணியில் பிளவு உண்டு பண்ண முயல்கிறார்.
தமிழக அரசின் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் எழுதிய நூல்கள் மற்றும் பெரியார் குறித்தான நூல்களை என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிடுவது, 2016 க்கு பின்பு தான் நடைபெறுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழக அரசிடமும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளிடமும் சதிகாரர் சண்முகம் சரவணன் அவர்களுக்கு ஆதரவாக யாசகம் கேட்கிறார்.
பல NGO குழுக்களுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டப்படும் கட்டுரையாளர்,இறுதியில் பல்லாயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பில் உருவான என்.சி.பி.ஹெச் நிறுவனத்தை மொத்தமாக கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருக்கும் ஒரு நபருக்கு ஆதரவாக, மனித உரிமைகள் முழக்கத்தையும் முன்வைக்கிறார். இந்த கட்டுரை வாயிலாக கட்சி சொத்தை அபகரிக்க நினைக்கும் ஒரு நபருக்கும் அவருக்கு உதவிய நபர்களுக்கும் வக்காலத்து வாங்கும்,திரு.எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.. இவ்வாறு அறம் தெரிவித்துள்ளார்.
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications