3 எம்எல்ஏக்கள்... பத்து கோடி பற்றி நான் பேசலையே... வழக்கு போடுவேன் - சரவணன் எம்எல்ஏ
நடிகர் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரி பற்றி நான் எதுவுமே பேசவில்லை என்று சரவணன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா குரூப் 3 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் ரூ. 10 கோடி கொடுத்ததாகவும், அவர்கள் லக்கி எம்எல்ஏக்கள் என்று மதுரை தெற்கு அதிமுக எம்.எல்.ஏ. சரவணன் கூறியதாக வீடியோ ஒன்று தனியார் சேனலில் ஒளிபரப்பானது.
நடிகர் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரிதான் சரவணன் குறிப்பிடும் அந்த மூன்று பேர். இவர்களுக்கு மட்டும் தலா ரூ. 10 கோடி பணம் தரப்பட்டதாக கூறியதாக வீடியோவில் ஒளிபரப்பானது.

ஓபிஎஸ் அணி பற்றியும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து ஒபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சரவணனிடம் இது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ சரவணன் இன்று சந்தித்தார். அதிமுக எம்எல்ஏக்களை அணி சேர்க்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறியது குறித்து விளக்கம் அளித்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அது பழைய வீடியோங்க. அந்த வீடியோ படத்தில் உள்ளது நான்தான். ஆனால் அதில் உள்ள குரலை டப்பிங் பேசியுள்ளனர்.
பேரம் பேசியதாக வெளியான வீடியோ முற்றிலும் தவறானது. அதுவும், தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. ஏன் இந்த வீடியோவை இப்போது ஒளிபரப்பினார்கள் என்று தெரியவில்லை.
எங்களின் வழக்கறிஞருடன் வீடியோ பற்றிய உண்மை தன்மையை ஆராய்ந்து, நிபுணர்களுடன் கலந்து பேசி வழக்கு போட தீர்மானித்துள்ளேன் என்றும் எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.
கூவத்தூர் கூத்து தொடங்கி பண பேரம் வரை எம்எல்ஏ சரவணனின் செயல்பாடுகள் அனைத்தும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications