ஈரோட்டில் ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம்.. மக்கள் கூறும் வித்தியாசமான காரணம்!
ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஈரோடு: ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் இதை ஏலம் எடுத்து இருக்கிறார்.
இதே எலுமிச்சை பழத்துடன் இன்னும் சில சின்ன சின்ன பொருட்களும் ஏலம் விடப்பட்டு உள்ளது. தேங்காய், பூ, மாலை, வாழைப்பழம் ஆகியவையும் ஏலம் விடப்பட்டு உள்ளது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் எலுமிச்சை பழம் ஒன்று இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது இதுவே முதல்முறை. ஐபிஎல் ஏலம் போலவே மிகவும் திரில்லாக இந்த ஏலம் நடத்தப்பட்டது.

சிவராத்திரி
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுக்க சிவராத்திரி கொண்டாடப்பட்டது. அதேபோல் சிவகிரியில் இருக்கும் பழந்திண்ணி கருப்பன்னன் கோவிலிலும் சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போதே இந்த ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சிறப்பாக நடந்த ஏலம்
அந்த சிவராத்திரியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு உள்ளது. பூஜையில் இருந்த தாம்பூல தட்டு தொடங்கி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் ஏலம் போய் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இந்த பொருட்களை ஏலம் எடுக்க வந்துள்ளனர்.

எலுமிச்சை பழம்
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக எலுமிச்சை பழம் ஒன்று 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு பூஜைக்கு, கடவுளின் அடியில் வைத்து படைக்கப்பட்டு உள்ளது. ஓலப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற நபர் இதை வாங்கியுள்ளார்.

சிறப்பு
இந்த எலுமிச்சைக்கு நிறைய சிறப்பம்சம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இன்னும் சில பொருட்கள் 5000 ரூபாய் வரை ஏலம் போய் இருக்கிறது. இதை ஏலம் எடுப்பதால் வாழக்கையில் நிறைய பலன் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications