ஆட்டம் காட்டும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் நாளை 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை பிடிக்க போலீசார், வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே மக்களின் பாதுகாப்பு கருதி நாளை மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பற்றி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து செம்மங்குளம் பகுதியை சுற்றியுள்ள ஊர் பொதுமக்களுக்கும் தேவையின்றி வெளியே வர வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து போலீசார், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் 10 குழுக்களாக பிரிந்து சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று சிறுத்தை நடமாட்டத்தால் மக்களின் பாதுகாப்பு கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 3 பள்ளிகளில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடந்ததால், மாணவ மாணவிகள் பாதுகாப்புடன் தேர்வு எழுதுவைதை உறுதி செய்ய போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்போது வரை சிறுத்தை புலி கண்டுபிடிக்கப்படாததால், பாதுகாப்பு கருதி நாளை 05.04.2024 அன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி இன்று இரவுக்கு சிறுத்தையை பிடிப்பதற்காக பல இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விரைவில் சிறுத்தை பிடிபட்டுவிடும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications