கமல் கட்சி தொடங்கியப் பின் கூட்டணி குறித்து முடிவு.. ஜெட் ஸ்பீடில் திருமாவளவன்!
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியப்பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலம்: நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியப்பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுகப் பகுதியை பார்வையிட்டார். களத்திற்கு வந்த பேச வேண்டும் என்று விமர்சித்தவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் தனது களப்பணியை துறைமுகத்தில் இருந்து இன்று தொடங்கினார் நடிகர் கமல்.

அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர். கமலின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சினிமாவில் முத்திரைப் பதித்தது போல அரசியலிலும் அவர் முத்திரை பதிக்க வாழ்த்துவதாக திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அரசியலுக்கு வருவதாக கமல்ஹாசன் வெளிப்படையாக அறிவித்துள்ளதை விசிக வரவேற்கிறது என்றார். கமல் கட்சி தொடங்கிய பிறகுதான் கொள்கை கோட்பாடுகள் அடிப்படையில் பிற கருத்துக்களை கூற முடியும் என்று கூறினார்.
மேலும் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் கமல்ஹாசன் கட்சி தொடங்கட்டும் பிறகு கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications