நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் எல்.ஹெச்.பி. பெட்டிகள்... விரைவில் வைகை, நெல்லை ரயில்களில்!
சென்னை: சென்னை டூ மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை டூ நெல்லை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதி நவீன லிங்க் ஹாப்மேன் புஷ் (எல்.ஹெச்.பி. பெட்டிகள்) ரயில் பெட்டிகளைப் பொருத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உள்ள ரயில் பெட்டிகளை விட இவை இலகு ரகமானது. முற்றிலும் மெட்டலால் ஆனது. ஜெர்மனி நாட்டு ரயில் பெட்டிகள் இவை. நவீன பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த ரயில் பெட்டிகள், உலகத் தரம் வாய்ந்தவையும் கூட.

அனில் ககோக்தர் தலைமையிலான பாதுகாப்பு மறு ஆய்வுக் கமிட்டியின் உயர் மட்டக் கூட்டத்திற்குப் பின்னர் இந்தியாவில் தற்போது ஓடி வரும் ரயில்களை இந்தப் புதிய எல்எச்பி பெட்டிகளுக்கு மாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ரயில் பெட்டிகள் அதிர்வுகளை ஏற்படுத்தாத அளவு சொகுசான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். மேலும் பாதுகாப்பு, இன்ன பிற வசதிகளும் அருமையாக இருக்கும். ரயில் பெட்டிகளின் எடையும் கூட குறைவு தான். எனவே ரயிலால் வேகமாகவும் போக முடியும். நீண்ட தூர ரயில்களில் இந்தப் பெட்டிகளை படிப்படியாக ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு பெட்டியும் ரூ. 2.5கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்டிகல் பொருத்தப்பட்ட ரயிலை மணிக்கு 160 கிலோமீட்டர் வரை வேகமாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெற்கு ரயில்வேயில் சென்னை மங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களில் இப்பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல கோவை சேரன் எக்ஸ்பிரஸ், செனனை அகமதாப்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அறிமுகமாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications