வாப்பா 'மின்னல்... மழை எப்போ வரும்?... மதிமுக பிரமுகரை கலாய்த்த விஜயகாந்த்
நெல்லை: கலிங்கபட்டியில் உள்ள வைகோவின் வீட்டிற்குச் சென்றிருந்த விஜயகாந்த்... மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி என்பவரைப் பார்த்து மழை எப்போ வரும் என்று கேட்டதால் கலகலப்பு ஏற்பட்டது.
நெல்லை தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சங்கரன்கோவில் அடுத்த கலிங்கப்பட்டியில் உள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு கடந்த 2ந் தேதி சென்றார்.
அவரை வீட்டு வாசலில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், ரோஜாப்பூ மாலையணிவித்து வரவேற்றார். பின்னர் வைகோ, விஜயகாந்த் கையை கோர்த்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

அங்கு தாயார் மாரியம்மாள், மனைவி ரேணுகாதேவி, மகன் துரை வையாபுரி, குடும்பத்தினர், தென்காசி ம.தி.மு.க., வேட்பாளர் சதன் திருமலைக்குமார், அக்கட்சி மாநில இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தினார்.
வாப்பா மின்னல்
உடனே மின்னல் முகமது அலியின் கைகளை பற்றிக் கொண்ட விஜயகாந்த்... மின்னல் வந்துருச்சி... அடுத்து மழை எப்போ வரும் என்று சட்டென்று கேட்கவே... அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அந்த இடமே அப்போது கலகலப்பானது.

அதனைத்தொடர்ந்து, விஜயகாந்திற்கு சூடான தோசை, வடை, இருவகை சட்னி, அல்வா, முந்திரிபருப்பு பரிமாறப்பட்டது. சூடான காபி தரப்பட்டது. அதை அவர் ருசித்து சாப்பிட்டார்.
ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அங்கிருந்த விஜயகாந்த் வைகோ உடன் நட்பு பாராட்டி பேசியது தேமுதிக, மதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications