‛‛அனில் கும்ப்ளேவாக அண்ணாமலை’’.. கணித்த நாராயணன் திருப்பதி.. திமுகவில் 10 விக்கெட் விழுவது உறுதியாமே!
திருப்பூர்: திமுகவில் தற்போது வரை 3 விக்கெட் வீழ்ந்துள்ளது. அனில் கும்ப்ளே போல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவின் 10 விக்கெட்டுகளை அண்ணாமலை வீழ்த்துவார் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் - என் மக்கள்' என்ற பெயரில் கடந்த ஆண்டு யாத்திரையை தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் யாத்திரை சென்றார். இந்த யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மாதப்பூரில் இன்று நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார்.
மாதப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேவேளையில் அதிமுகவை அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதிமுவின் முன்னாள் முதல்வர்களான மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கழற்றிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுகவின் ஓட்டுகளை பாஜக நோக்கி ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி இப்படி பேசியுள்ளார்.
முன்னதாக அந்த பொதுக்கூட்டத்தில் பாஜவின் பல்வேறு தலைவர்கள் பேசினர். பாஜகவின் தமிழக துணை தலைவர் நாராயணன் திருப்பதியும் பேசினார். அப்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவுடன் ஒப்பிட்டு பேசினார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றிபெற வைத்திருப்பார்.
அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த நாராயணன் திருப்பதி, பாஜக தலைவர் அண்ணாமலை அனில் கும்ப்ளே போன்று திமுகவில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என கூறினார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி பேசியதாவது: தமிழ்நாட்டில் இன்றைய தினம் 3 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே கிரிக்கெட்டில் போட்டி நடக்கிறது. முதல் விக்கெட் என்பது அண்ணாமலை பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்தபோதே விழுந்தது. செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்றார். சிறைக்கு சென்றவர் இன்னும் வெளியே வரவில்லை.
அடுத்தது விழுப்புரத்தை சேர்ந்த இன்னொரு முக்கிய அமைச்சர். நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். சட்டசபையில் நம்முடைய ஆளுநர் ரவியை போயா.. போயா என சொன்னதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆளுநரை போயா.. போயா எனக்கூறியவரே இப்போது சட்டசபையில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் தான் பொன்முடி.
3வதாக நேற்று முன்தினம் ஐ பெரியசாமி. அவர் இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உள்ளாக திமுகவின் 10 விக்கெட்டுகள் கண்டிப்பாக விழும் என்ற நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக அனில் கும்ப்ளே போன்று அண்ணாமலை திமுகவின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்து மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் பாஜகவுக்கு கொடுப்பார் என நம்பிக்கை உள்ளது'' என்றார்.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications