கட்டண குறைப்பு... மத்திய அரசு மாதிரியே ஸ்டன்ட் அடிக்கும் அதிமுகவை பாருங்க மக்களே!
பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறதோ அதே நிலைப்பாட்டை மாநில அரசும் பேருந்து கட்டண விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தை பொருத்தமட்டில் விலையேற்றத்தின் போது ரூபாய் கணக்கிலும், குறைக்கும் போது பைசா கணக்கிலும் மத்திய அரசு செய்வதை போல் மாநில அரசும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்போது ரூபாய் கணக்கிலும் குறைக்கப்படும் போது பைசா கணக்கிலும் செய்கிறது.
கச்சா எண்ணெய்யின் விலை சந்தையில் கூடுவது, குறைவதற்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றிக் கொள்ளும் குறைத்துக் கொள்ளும். அச்சமயம் பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் கணக்கில் உயர்த்தும். ஆனால் கச்சா எண்ணெய் குறையும் போது வெறும் பைசா கணக்கில் மட்டுமே குறைக்கும்.
இதில் பெட்ரோல்- டீசல் விலை ஏற்றப்பட்டாலும் நாங்கள் குறைத்தோம் என்று மத்திய அரசு மார்தட்டி கொள்ளும்.

தமிழக அரசு நடந்து கொள்கிறது
மத்திய அரசுக்கு இணக்கமாகவே தமிழக அரசு நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை 66 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியது.

திரும்ப பெற கோரி போராட்டம்
கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டணம்
மக்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைப்பதாக கூறி அனைத்து நிலைகளிலும் ரூ. 1 -ஐ குறைத்துள்ளது. இதை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக கோருகிறது.

தமிழக அரசு பின்பற்றும்
பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், இறக்கத்தின்போது மத்திய அரசு எப்படி செயல்படுகிறதோ அதுபோல் மாநில அரசும் நடந்து கொள்கிறது. பேருந்து கட்டண உயர்த்தப்பட்டபோது ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியது. ஆனால் குறைக்கும் போது பைசா கணக்கில் குறைக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றே கூறப்படுகிறது. மக்களின் சுமையும் குறைய போவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications