500,1000ஐ வாங்கிக் கொண்டு மது கொடுக்கனும்... மது குடிப்போர் சங்கம் கோரிக்கை!
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு மது தர வேண்டும் என தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு மது தர போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகின்றன.

இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் தரப்பட்டிருந்தாலும், இன்று அது சாத்தியமில்லை. இதனால் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மத்திய மற்றும் தமிழக அரசிற்கு முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளது.
அதாவது, 'இன்று மதுகுடிக்க டாஸ்மாக்கிற்கு செல்லும் குடிமகன்கள் சில்லறைப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பலர் மது வாங்கக் கூட முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும்.
எனவே, குடிமகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மற்றும் பார்களில் இன்ரு 500 மற்றும் 1000 நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு மது வழங்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications