சரக்கு, பிரியாணி, ரூ.500- மதுரை இளைஞர் விழாவுக்கு ஆள் பிடித்த எடப்பாடி கோஷ்டி- தாக்கும் தீபா 'கேங்'
மதுரையில் நடக்கும் இளைஞர் விழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு,மது பாட்டிலும் பிரியாணியும்,தலா ஒருவருக்கு ரூ.500 ம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறது எடப்பாடி பழனிச்சாமி அணி என்று பரபரப்பு புகார் கூறியுள
சென்னை: மதுவும் பிரியாணியும் கொடுத்து செலவுக்கு ரூ.500 ம் கொடுத்து மதுரை இளைஞர் விழாவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்கள் ஆள்பிடிக்கிறார்கள் என்று தீபா பேரவையினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தீபா பேரவையில் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்!

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள், சசிகலாவின் பினாமி முதல்வர் பழனிசாமி தலைமையில் இணைந்ததாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும்.
இணைந்தவர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் துளி அளவுக்கூட தொடர்பில்லை. மாநில,மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் இணைந்ததாக கூறுவது இமாலய பொய்யாகும்.மாறாக சசிகலா அணி பிள்ளைப் பிடிக்கும் பூச்சாண்டியைப் போல அமைச்சர்கள் முதல் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
மதுரையில் இளைஞர்கள் விழா என்ற பெயரில் பினாமி முதல்வர் எடப்பாடி கலந்துக்கொள்ளும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு 500ரூபாய் மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகித்து அரசு பஸ்களை இலவசமாக இயக்கி வருகிறார்கள்.
மதுரையில் குடிநீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. தென் தமிழகத்தில் கலாச்சாரத்திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும் இத்தருணத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சசிகலா அணியினர் விழா நடத்துவதை பொதுமக்கள் விரும்பவில்லை.மாறாக கண்டிக்கிறார்கள்.
திருவிழா நடைபெறுவதற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முடியாத கையாளாகத எடப்பாடி அரசை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எங்கள் பேரவையை சேராதவர்களை, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையோடு இணைத்து தொடர்ந்து செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications