டாஸ்மாக் தொடர் விடுமுறை.. ஆந்திரா, புதுச்சேரிக்கு படையெடுக்கும் குடிமகன்கள்!
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, புதுச்சேரி மாநிலத்துக்கு குடிமகன்கள் படையெடுத்து வருகின்றனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் குடிமகன்கள் பலரும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுகள், பார்களுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. கடந்த 3 நாட்களாக மதுவிற்பனை தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஆந்திர மாநிலம், புதுச்சேரி, கேரளா மாநிலத்துக்கு குடிமகன்கள் நேற்று படையெடுத்தனர்.

இதனால், இவ்விரு மாநிலங்களிலும் சரக்கு விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக, புதுச்சேரி, கேரளா எல்லையை ஒட்டிய களியக்காவிளை அருகே உள்ள மதுக்கடைகளில் கடந்த 3 நாட்களாக தமிழகக் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. பலரும் இக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
சிலர் சரக்குகளை வாங்கி அருந்தி விட்டு, தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி பைகளில் நிரப்பி கொண்டு வருகின்றனர். இதனால், ஆந்திர எல்லையோர டாஸ்மாக் கடைகளில், குடிமகன்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிலர் போலீசுக்கு தெரியாமல் அங்கிருந்து சரக்குகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றனர். மேலும், புதுச்சிரி எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கடந்த 3 நாட்களாக தமிழகக் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications