புத்தாண்டு கொண்டாட்டம்.. குடித்துக் குவித்த குடிகாரர்களால்.. ரூ.210 கோடி மது விற்பனை !
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டாஸ்மாக்கில் ரூ.210 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.210 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபான கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 கோடிக்கும், சனி மற்றும் ஞாயிறு கிழமை உள்ளிட்ட இதர விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 80 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெறும்.

திருமணம், கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மது பிரியர்கள் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை நோக்கி படை எடுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.
இந்த வருடம் புத்தாண்டையொட்டி மதுபிரியர்கள் தங்களது விருப்பமான மதுவகைகளை வாங்கி நண்பர்களுடன் அருந்தி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடிவிடுவார்கள் என்பதால் ஒருசிலர் கூடுதலாக மதுவகைகளை வாங்கி வைத்து நள்ளிரவு 12 மணிக்கு மது அருந்தினர்.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.210 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இருதினங்களில் மட்டும் இந்த அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளாதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications