மைலாப்பூர் சாய்பாபா கோயில் தீபாவளி பிரசாதத்தில் பல்லி..சாப்பிட்ட 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் பல்லி கிடந்த பிரசாதத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை மைலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் நடைபெற்ற சிறப்பு தீபாவளி பூஜையில் வழங்கப்பட்ட தயிர் சாத பிரசாதத்தில் பல்லி கிடந்துள்ளது. இதனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சென்னை மைலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள தேனாம்பேட்டையில் இருந்து வேலன் என்பவர் தனது மனைவி மற்றும் பிரிவின், கலை ஆகிய 2 குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றார்.

சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட வேலனும் அவரது குடும்பத்தினரும் சாய்பாபா கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட சாம்பார் மற்றும் தயிர் சாதங்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாம்பார் சாதத்தை வேலனும் அவரது மனைவியும் சாப்பிட்டுள்ளனர். குழந்தைகள் இருவருக்கும் தயிர் சாதத்தைக் கொடுத்துள்ளார். தயிர் சாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைகள் அதில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனைப் பார்த்து பதறிப் போன வேலன் கோயில் நிர்வாகத்திடம் சென்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த சாய்பாபா கோயில் நிர்வாகத்தினர் பிரசாதத்தை லிப்டில் கொண்டு வரும் போது பல்லி விழுந்திருக்கும் என்று பதில் அளித்துள்ளனர்.
இதனிடையே குழந்தைகள் இருவரும் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த வேலன் தனது இரு குழந்தைகளையும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வேலன் மையிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையின் போது, ஆயிரக்கணக்கானோர் சாப்பிடும் பிரசாதத்தில் கவனக்குறைவாக பல்லி விழ வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு பாதிக்கப்பட்ட வேலன், கோயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பார்த்து விசாரணை நடத்தும் படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications