விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த திமுகவின் தேர்தல் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாய கடன் தள்ளுபடி, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் என விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Loans of small farmers are to be waived off says DMK

1. வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்கைகள் கொண்டு வரப்படும்.

2. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

3. சிறு, குறு விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

4. வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.

5. வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய வசதி செய்யப்படும்.

6. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

7. கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டி வாடகை ரூ. 1,200 சேர்த்து ரூ. 3,500 வழங்கப்படும்.

8. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.

9. கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

10. ஊரக வேலைவாய்ப்பு கூலி ரூ.100 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும்.

11. கூடுதலாக சேர்க்கப்படும் 50 நாட்கள் விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

என்று விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், விவசாயிகளின் வாக்குகளை கவரும் வகையிலும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது திமுக. இந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவை ஆட்சிக்கட்டிலில் விவசாயிகள் அமரவைப்பார்களா? மே 19ம் தேதி தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+