ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் சென்னை திரும்புகிறார் லண்டன் டாக்டர்
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் லண்டனிலிருந்து சென்னைக்கு வருகிறார் டாக்டர் ரிச்சர்ட் ஜான்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஸ்பெஷஸிஸ் லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஜான். இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வரவழைக்கப்பட்டிருந்தார்.

முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டு ரிச்சர்ட் இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு அவர் அப்பாயின்மென்ட் கொடுத்த சில அவசர பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தபடியுள்ளார்.
[Read This: காவிரி குறித்து கேள்வி- கன்னட டிவி இண்டர்வியூவில் மைக்கை கழற்றிப் போட்டு வெளியேறிய பிரகாஷ்ராஜ்!]
அந்த பணிகளை முடித்துக்கொண்டு, உடனடியாக திரும்பி வருமாறு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலா உறவினர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மறுபடியும் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொடர்பான தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் சென்னைக்கு இந்த வாரம் வருகிறார்கள் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications