சென்னையில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு- நீண்ட வரிசையில் பலமணிநேரம் பொதுமக்கள் காத்திருப்பு!!
சென்னை: வெள்ளம் மூழ்கிய சென்னை நகரில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் கிடைக்கும் பங்குகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பேய்மழை வெள்ளம், ஆறுகளின் வெள்ளம் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிட்டது. சென்னை நகரமே பல தீவுகளாக துண்டாடப்பட்டுவிட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேவையான அளவு இல்லாததால் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதுபோன்ற சரக்குகள் இல்லாததால் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளும் பெருமளவில் இயக்கப்படவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படவில்லை. கைவசம் இருப்பு உள்ள பெட்ரோல், டீசல்களை கொண்டு இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் அனைத்தும் சீக்கிரமாகவே மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் முன்பு "நோ ஸ்டாக்" போர்டுதான் தொங்குகிறது. பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட்ட ஒரு சில பங்குகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோல் போட்டு செல்லும் நிலைமைதான் நீடிக்கிறது.
இதேபோல் சென்னை நகரில் சமையல் எரிவாயு விநியோகமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications