''இதற்கு மேலும் கள்ளக்காதல் வேண்டாம் என்றேன்.. கேட்கலையே என் மனைவி''
நாமக்கல்: நாமக்கல் அருகே பலமுறை கூறியும் கள்ளக்காதலை கைவிடாத மனைவியையும், அவருக்குப் பிறந்த 2 மாதக் கைக் குழந்தையையும் கொன்று விட்டார் கணவர்.
பலமுறை சொல்லியும் கள்ளக்காதலை தனது மனைவி விடாததால்தான் தான் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் அருகே மனைவி மற்றும் 2 மாத ஆண் குழந்தையை லாரி டிரைவர் பெரியண்ணன் என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் போலீஸில் சரணடந்தார்.
அங்கு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், எனது மனைவிக்கும் சேந்தமங்கலத்தை அடுத்த காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை பலமுறை நான் கண்டித்தேன். தொடர்பை துண்டித்து விடுமாறு கூறினேன். ஆனால் அவர் தொடர்பை துண்டிக்கவில்லை.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு எனது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை எனக்கு பிறக்கவில்லை. அந்தக் குழந்தை பார்ப்பதற்கு கள்ளக்காதலனான பஸ் டிரைவர் உருவம் போல் இருந்தது. இதற்கு மேலும் கள்ளத் தொடர்பு வேண்டாம் என்று மீண்டும் கூறினேன். ஆனால் எனது பேச்சை கேட்க எனது மனைவி மறுத்து விட்டார்.
சில தினங்களுக்கு முன்பு எனது மனைவி கள்ளக்காதலனுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் என்னை கொலை செய்ய தயாராகி வருவதை நான் தெரிந்து கொண்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த நான் நேற்று நள்ளிரவு எனது மனைவியை கொடுவாளால் கொன்று விட்டு அந்தக் குழந்தையை அடித்து கொன்று விட்டேன் என்று தெரிவித்துள்ளார் பெரியண்ணன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications