சென்னை: 300 அடி ஆழ குவாரி குட்டையில் மூழ்கிய லாரி: பலியான கிளீனர் உடலை மீட்பதில் சிக்கல்!
பல்லாவரம்: சென்னையை அடுத்த திரிசூலம் கல்குவாரியில் 300 அடி பள்ளத்தில் கிளீனருடன் நீரில் மூழ்கிய லாரி மற்றும் கிளீனர் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. லாரியின் பின்பக்க டயர்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. மூன்றாவது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை நீடிக்கிறது.
பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த பகுதியில் கல்குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டதால், தற்போது குவாரிகள் ஏதும் இயங்கவில்லை. இங்குள்ள 1ம் நம்பர் கல் குவாரியின் மேல் பகுதியில் தனியார் கிரஷர் நிலையம் உள்ளது.

இங்கு, கருங்கற்களை கொண்டு வந்து கொட்டி ஜல்லிகளாக மாற்றி லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை ஜல்லி ஏற்றிச் செல்ல டிப்பர் லாரி ஒன்று வந்தது. டிரைவர் ராமு என்பவர் லாரியை ஓட்டி வந்தார். இதில், கிளீனராக கலைவாணன் (25) என்பவர் இருந்தார்.
தண்ணீரில் மூழ்கிய லாரி
லாரியை கிரஷரில் நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக ராமு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, லாரியை ஜல்லி ஏற்றுவதற்கு கலைவாணன் எடுத்தபோது, லாரியில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால், கல் குவாரி மேல் இருந்து, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லாரி
தண்ணீருக்குள் மூழ்கியது.
லாரியில் இருந்த கலைவாணன் தண்ணீரில் மூழ்கி பலியானார். உடனடியாக இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர்.
தீயணைப்பு வீரர்கள்
இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சூரியபிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் டியூப் கட்டி, லாரி விழுந்த இடத்தில் பாதாள கொலுசை கயிறு மூலம் கட்டி ஆய்வு செய்தனர். அப்போது 50 அடி ஆழத்தில் லாரி சிக்கிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
300 அடி பள்ளத்தில் கிரேனை கொண்டு வந்து இறக்குவது சிரமம் என்பதால் கல்குவாரியின் உச்சியில் லாரி கவிழ்ந்த பகுதியில் ராட்சத கிரேன் கொண்டு வந்து அதன் மூலம் ரோப் கயிறு இறக்கி லாரியை தூக்க முடிவு செய்யப்பட்டது.
கிரேன் மூலம் மீட்பு பணி
கிரேன் உரிமையாளர்கள் விபத்து நடந்த இடத்தை வந்து பார்த்து விட்டு கிரேன் கொண்டு வருவதாக கூறிச்சென்றனர். ஆனால் யாரும் கிரேனை கொண்டு வரத்தயாராக இல்லை. அதற்குள் இருட்டி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 2வது நாளாக நேற்று காலை தண்ணீரில் மூழ்கிய டிப்பர் லாரி மற்றும் கிளீனரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மீட்பு வாகனம் ஒன்றில் இரும்பு ரோப் கயிறு கட்டி தண்ணீரில் மூழ்கிய லாரியை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மீட்பு வாகனம், பொக்லைன், ஜே.சி.பி. எந்திரங்கள் கல்குவாரியின் உள்ளே கொண்டு வரப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வந்து ரப்பர் டியூப்களில் வைத்துக்கொண்டு ஆழ்கடலில் நீந்தும் அனுபவம் உள்ள 5 மீனவர்கள் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இரும்பு ரோப்புகளை லாரியில் கட்டினர்.
அறுந்த இரும்பு கயிறு
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பணியின் போது வெற்றிகரமாக இரும்பு ரோப்பை கட்டி மீட்பு வாகனம் மூலம் இழுத்தனர். அப்போது லாரியின் பாரம் தாங்காமல் இரும்பு ரோப் பாதியாக அறுந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால் மீட்பு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் பின்னர் மாலை 4 மணிக்கு தடிமனான புதிய இரும்பு ரோப் கயிறு கொண்டு வரப்பட்டு மீண்டும் லாரியில் கட்டி இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் லாரியில் கட்ட முடியவில்லை.
ஆக்சிஜன் அவுட்
இதற்கிடையே சிலிண்டரில் இருந்த ஆக்சிஜன் காலியானது. இதனால் தண்ணீரில் மூழ்குபவர்கள், ஆக்சிஜன் இல்லாமல் ஆழமான பகுதிக்கு செல்ல முடியாது என கூறி விட்டனர். இதையடுத்து புதிதாக ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வரப்பட்டு மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கியது.
மீட்பு வாகனத்தில் லாரியை இழுக்கும் அளவுக்கு போதிய திறன் இல்லாததால் பொக்லைன் எந்திரத்தில் ரோப் கயிறு கட்டி லாரியை மீட்கும் முயற்சியில் மாலை 5 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தண்ணீரில் மூழ்கிய லாரியின் பாகத்தில் ரோப் கயிறை கட்டி பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கப்பட்டது.
மீண்டும் தேடுதல் வேட்டை
லாரி தண்ணீரை விட்டு சுமார் 20 அடி உயரத்துக்கு வந்த போது மீண்டும் இரும்பு ரோப் கயிறு 2வது முறையாக அறுந்து விழுந்தது. அதற்குள் இருட்டத் தொடங்கி விட்டது. இருந்த போதிலும் மீட்பு வாகனம், பொக்லைன் எந்திரம், ஜே.சி.பி. எந்திரங்களில் உள்ள மின்விளக்குகளை எரிய விட்டு அந்த வெளிச்சத்தை கொண்டு தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கிளீனர் உடல் எங்கே
மீண்டும் ரோப் கயிறை லாரியில் கட்டி இழுத்தனர். இரவு 7 மணியளவில் பொக்லைன் எந்திரத்தை வைத்து இழுத்த போது லாரியின் பின்பக்க டயர்கள் மட்டும்(என்ஜினில் இருந்து இயக்க செய்யும் கிரவுன் பகுதியுடன்) தனியாக மீட்கப்பட்டது. லாரியின் மீதம் உள்ள பகுதிகளை தண்ணீரில் இருந்த மீட்க முடியவில்லை.
இதற்கிடையில் தண்ணீரில் மூழ்கிய லாரியை ராட்சத கிரேன் மூலம் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரும் வழியில் மின் வயர்கள் தடுப்பதால் ராட்சத கிரேனை கொண்டு வரமுடியவில்லை எனவும், மின் வயரை அகற்றி கிரேனை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மூன்றாவது நாளாக தேடும் பணி
தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் லாரியின் முன்பகுதியை மீட்கும் பணி 3வது நாளாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறும். லாரியின் முன்பகுதியை மீட்டால் தான் அதில் கிளீனர் கலைவாணன் உடல் இருக்கிறதா? அல்லது தண்ணீரில் மூழ்கி விட்டதா? என்பது தெரியவரும் என தீயணைப்பு விரர்கள் தெரிவித்தனர்.
கிளீனர் கலைவாணன்
நீரில் மூழ்கி பலியான கலைவாணன் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில். இவர், திரிசூலம், இந்திரா நகர், எம்ஜிஆர் தெருவில் வசித்து வந்தார். இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications