தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை உயரும் அபாயம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது.
சென்னை: டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை கண்டித்து இன்று முதல் 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் மீதான வாட் வரி, 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்கள் பயன்படுத்த மத்திய அரசின் தடை உத்தரவு ஆகிய விவகாரங்களை கண்டித்து மார்ச் 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது.

அதன்படி லாரி ஸ்டிரைக் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
இந்நிலையில் நேற்று, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார். மாநிலத்தில் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் தமிழக அரசு நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் திட்டமிட்டபடி இன்று ஸ்டிரைக் நடக்கிறது. தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவதற்காக செய்யப்படும் புக்கிங் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் ரூ.5000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் அபாய நிலை உள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications