உயிருக்கு பாதுகாப்பு இல்லை... நெல்லை போலீசில் கேரளா ஜோடி தஞ்சம்
நெல்லை: கேரளாவை சேர்ந்த காதல் ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெய்வசெயல்பேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேன்டீனில் டீ விற்கும் வேலை பார்த்து வந்தார். திருவனந்தபுரம் கமலேஸ்வரபுரம் ஆரியங்குழி சாலையை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் அங்குள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு ரயிலில் செல்லும் போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் வீட்டாருக்கு காதல் விவகாரம் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அச்சம் அடைந்த காதல் ஜோடி திருவனந்தபுரத்தில் இருந்து தப்பி நெல்லை வந்தனர். மதுரை அருகே உள்ள வெங்கடசேபுரம் பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அந்த மாநில போலீசார் மூலக்கரை வந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஜோடி மாலையில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கும் படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டனர். எஸ்பி அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் மனுவை பெற்று கொண்டு அனுப்பி வைத்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications