பெற்றோர் எதிர்ப்பு.. காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை… ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு

பெற்றோர்களின் தொடர் எதிர்ப்பால் காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பெற்றோர்கள் எதிர்ப்பால் காதல் ஜோடிகள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி காவல் நிலையம் சரகம் நெடுங்குளம், ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் 21 வயதான விஜயகுமார். அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் 21 வயதான அபிராமிசுந்தரி.

Lovers committed suicide by consuming poison

விஜயகுமார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் ஐடிஐயில் மெக்கானிக்கல் படிப்பை முடித்துள்ளார். அபிராமி சுந்தரி, விஜயகுமார் படித்த கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது. நீண்ட நாட்கள் காதலித்த வந்த இவர்களின் காதல் பற்றி அபிராமி சுந்தரியின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அபிராமியை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த விஜயகுமாரும், அபிராமி சுந்தரியும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடலும் விஜயகுமாரின் வீட்டில் பிணமாக கிடந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்த கூமாப்பட்டி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனகைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+