காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது.. நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யுமாம்!
காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக்கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக்கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில்தான் வெயில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.
சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வேகமாக வற்ற தொடங்கியுள்ளன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

காற்றழுத்தம்
இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மேகமூட்டமும் அவ்வப்போது வெயிலும் நிலவி வருகிறது.

தாழ்வு மண்டலமானது
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை
இதன்காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிக்கு மேலும் 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடற்பகுதியில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 15ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டிருப்பதாகவும் இதனால் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications