காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது: ஆனாலும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்
சென்னை: காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், நாளை மதியம் முதல் மழை குறையும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தமிழ்நாடு பக்கம் நகர்ந்ததால் கடந்த 2 நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையில் பெய்த தொடர் மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காலையில் திடீர் மழை
வெள்ளம் வடியாத சூழ்நிலையில் இன்று காலையிலும் திடீரென மழை பெய்தது. மயிலாப்பூரில் காலை 8.30 மணியளவில் பெய்த மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவொற்றியூர், கார்கில் நகர், எண்ணூர், காலடிப்பேட்டை, மணலி, வியாசர்பாடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வீடுகளுக்குள் தண்ணீர்
புழல் லட்சுமிபுரம் ஆசிரியர்கள் காலனி, வெங்கடேஸ்வரா நகர், சாரதி நகர், ஆதிலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பிரகாஷ் நகர், பொன்னியம்மன்மேடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீர் வெளியேற்றம்
அம்பத்தூர், ராஜீவ் நகர், திருமலைப்பிரியா நகர் பகுதிகளிலும் மழை தண்ணீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. அம்பத்தூர் எஸ்டேட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழை தண்ணீர் புகுந்து விட்டதால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

சூழ்ந்த வெள்ளநீர்
விருகம்பாக்கம், காவிரி நகர், அண்ணாமலை காலனி, லோகையா தெரு, வேளச்சேரி ராம் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதிகளிலும் மழை தண்ணீர் சூழ்ந்து வடியாமல் உள்ளது.

சேறும் சகதியுமாய்
கோயம்பேடு காய்கறி சந்தை உழுதுபோட்ட விவசாய நிலம் போல் சேரும் சகதியாகி விட்டது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காணப்படுகிறது.

அகற்றும் பணி
சென்னை நகரம் முழுவதும் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி பொன்னேரியில் 56 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் 70, பூந்தமல்லியில் 45, தாமரைப்பாக்கத்தில் 38, அம்பத்தூரில் 22, ஊத்துக்கோட்டையில் 26, பள்ளிப்பட்டில் 40 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்து பதிவாகி உள்ளது.

நிரம்பும் ஏரிகள்
சென்னையின் குடிநீர் ஆதார நீர்பிடிப்பு பகுதிகளான பூண்டியில் 23 மி.மீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 27 மி.மீ மழையும், சோழவரத்தில் 40 மி.மீ மழையும், புழல் ஏரியில் 40.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்மழையால் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

மூழ்கிய பயிர்கள்
டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்வதால், அங்கு, பல லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள, சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன. நாகை மாவட்டத்தில், சம்பா பயிர்கள் நன்கு வளர்ந்து, உரம், பூச்சி மருந்து தெளிப்பதற்குரிய சூழலில் கடந்த, மூன்று நாட்களாக, மழை விடாது கொட்டி வருகிறது.
இதனால், விவசாயப் பணி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. நடவு செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கிக் கிடப்பதால், விவசாயிகள்சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சாலைகள் சேதம்
கடந்த மாதம், 18ம் தேதி, வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, தமிழகம் முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், 4,500 கி.மீ., அளவிற்கு சாலைகள் சேதமடைந்தன. சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அரசிற்கு அறிக்கை அளித்தனர். சாலைகளை சீரமைக்க, 60 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருவதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சில தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகளின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

நீலகிரியில் மண் சரிவு
நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் மழையால், சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மலை ரயில்பாதையில் மரம் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழை குறையும்
இதனிடையே காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், நாளை மதியம் முதல் மழை குறையும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications