வலுவிழந்தது தாழ்வு நிலை... தொடர் மழைக்கு முற்றுப்புள்ளி ... குமரி, தூத்துக்குடியில் மட்டும் பெய்யும்
சென்னை: குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெய்து வந்த மழை ஓய்ந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் புரட்டிப் போட்டு வந்தது கன மழை. இதன் காரணமாக சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. கடலூர் சின்னாபின்னமாகிப் போனது.

இந்த நிலையில் வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் சற்று முன்பு பேசுகையில், வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று வலுவிழந்து விட்டது.
இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை ஓயும். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். கிழக்கிலிருந்து வரும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இங்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
இவை தவிர்த்த பிற தமிழகப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. கன மழைக்கும் வாய்ப்பில்லை.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 4 செமீ மழை பெய்திருந்தது என்றார் பாலச்சந்திரன்.
இந்த அறிவிப்பின் மூலம் தொடர் மழையால் ஊறிப் போய்க் கிடக்கும் தமிழகத்திற்கு மழையிலிருந்து ஒரு ஓய்வு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications