லோக்சபா தேர்தல் 2014 – துணை மேயர் பதவியை ராஜினாமா செய்த மதுரை வேட்பாளார்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களின் உள்ளாட்சி, அரசு பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
மதுரை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துணைமேயர் கோபாலகிருஷ்ணன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு பதவிகளை வகிப்போர் திங்கள்கிழமை தங்களுடைய பதவி களை ராஜினாமா செய்தனர்
அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
மதுரை தொகுதிக்கு மாநகராட்சி துணை மேயர் கோபாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விருதுநகருக்கு சிவகாசி ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ் ணன், சிவகங்கைக்கு தேவக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூருக்கு நீலகிரி ஊராட்சித் தலைவர் பரசுராமன், பெரம்பலூருக்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மருதைராஜ், பொள்ளாச்சிக்கு மூங்கில்தொழுவு ஊராட்சித் தலைவர் மகேந்திரன், நீலகிரிக்கு (தனி) குன்னூர் நகராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன், திருப்பூருக்கு கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியபாமா, நாமக்கல்லுக்கு மாவட்ட கவுன்சிலர் சுந்தரம், விழுப்புரத்துக்கு (தனி) மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், காஞ்சிபுரத்துக்கு (தனி) திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் குமரவேலன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் சில வேட்பாளர்கள் கூட்டுறவு சங்கப் பொறுப்புகளிலும் அரசு வழக்கறிஞர்களாகவும் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகாத போதும் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் தாங்கள் வகித்துவந்த உள்ளாட்சி உள்ளிட்ட அரசு பொறுப்புகளை திங்கள்கிழமை காலையில் ராஜினாமா செய்துவிட வேண்டும் என தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி துணைமேயர் கோபாலகிருஷ்ணன் தனது ராஜினாமா கடித்தத்தை மேயர் ராஜன் செல்லப்பாவிடம் அளித்தார்.
அதேபோல வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அரசு வழக்கறிஞர்களும் தங்களில் பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications