அடேங்கப்பா? விடுதலைப் புலிகளின் அரசியல் படை பிரிவு நாங்கதான்.. நாம் தமிழர் நிர்வாகி சர்ச்சை ட்வீட்
சென்னை: நாம் தமிழர் கட்சி என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் படை பிரிவு என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் தலைவராக கூறிக் கொள்ளும் @SunandhaTS பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக அறிவித்தனர். இனப்படுகொலை பேரழிவுடன் தமிழீழ விடுதலைக்கான யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் தமிழ்நாட்டில் சினிமா இயக்குநர் சீமான் தலைமையில் நாம் தமிழர் என்கிற இயக்கமும் அதுவே அரசியல் கட்சியாகவும் மாறியது.

நாம் தமிழர் என்ற பெயர், தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனர் நடத்திய கட்சியினுடையது. அதனைப் பெற்ற சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையே தமது அரசியல் கட்சியின் கொடியாக உருமாற்றினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் போல மஞ்சள், சிவப்பு நிறத்தை முதன்மைப்படுத்தினார். தமிழீழ விடுதலைதான் இனத்தின் இலக்கு என்பது சீமானின் முழக்கம்.
அதேநேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால் தனித் தமிழ்நாடு உள்ளிட்டவை இல்லாத பேச்சளவில் மட்டுமேயான தமிழ்த் தேசிய அரசியலை கொள்கையாகவும் முன்வைத்து வருகிறார் சீமான். பிரிவினைவாத அரசியலை வாக்கு வங்கி அரசியல் கட்சி பேச முடியாது என்பதால் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உருவப்படம், விடுதலைப் புலிகளின் தளபதிகளின் உருவப் படங்கள் ஆகியவற்றை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுவதும் இல்லை. இது பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை தலைவர் என தம்மை ட்விட்டரில் அறிவித்துக் கொண்டிருக்கும் Sunandha Thamaraiselvan @SunandhaTS இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தமிழனத்தலைவரை தாங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் படைப்பிரிவான நாம் தமிழர் கட்சி உறவுகள்! என அறிவித்துள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சி என்பது, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு என அதில் தெரிவித்துள்ளார். இது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் படுகொலை செய்தோம் என சீமானும் அவரது கட்சியினரும் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications