சென்னை அருகே கடலில் "ஆடி" வந்த கார்... திருடர்கள் போட்டுச் சென்றதாக தகவல்
சென்னை: சென்னை அருகே கோவளம் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆடி கார் கடல் நீரில் மிதந்து வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று காரை மீட்டனர். இந்தக் காரை திருடர்கள் திருடிச் சென்று கடலில் போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
கோவளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் ஒரு கார் அலையில் சிக்கி மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக மீனவர்கள் 20 பேர் மீன் பிடிக்க பயன்படுத்தும் கயிறுகளை பயன்படுத்தி காரை கரைக்கு இழுத்து வர முயற்சித்தனர்.

கடல் சீற்றமாக இருந்ததாலும், சூறைக்காற்று வீசியதாலும் காரை கரைக்கு இழுத்து வருவது சிரமமாக இருந்தது. மேலும் பாறை இடுக்கிலும் அது சிக்கிக் கொண்டது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். பொக்லைன் மூலம் கார் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
அது பதிவு எண் கூட இன்னும் வழங்கப்படாத புத்தம் புதிய ஆடி கார். கார் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது ஒரு மணிபர்ஸ், செல்போன் இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், மேடவாக்கத்தை அடுத்துள்ள கெளரிவாக்கத்தைச் சேர்ந்த வில்லியம் என்பவர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாருடன் வந்தார். அதில் அவர், ‘நான் கல்குவாரி நடத்தி வருகிறேன். என்னிடம் எனது அத்தை மகன் ஜோஸ்வா (27) என்பவர் கார் டிரைவராக இருக்கிறார். சம்பவத்தன்று எனது புதிய சொகுசு காரை கொடுத்து தொழில் சம்பந்தமாக ஒருவரை பார்ப்பதற்காக அனுப்பி வைத்தேன்.
அவர் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தபோது முட்டுக்காடு அருகே காரை சாவியோடு ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை கடத்திச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜோஸ்வா எனக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், கார் கோவளம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்ததும் இங்கு வந்தேன்' என்று கூறினார்.
வில்லியம் சொன்னது போல நடந்ததா என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications