கருணாநிதியின் மகன்... சொன்னதை செய்வேன்... சவால் விடும் மு.க. அழகிரி
மதுரை: நான் கருணாநிதியின் மகன். சொன்னதையே செய்வேன் என்று மு.க. அழகிரி சவால் விடுத்துள்ளார்.
கருணாநிதி உடல்நல குறைவால் கடந்த மாதம் 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி திடீரென அக்கட்சியில் சேர முடிவு செய்து பிரச்சினையை கிளப்பியுள்ளார்.

இதையடுத்து அவரை மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ள முடியாது என்று திமுக சார்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது. இந்நிலையில் கருணாநிதியின் உடன்பிறப்புகள் தன்னுடன் இருப்பதாக கூறிய அழகிரி வரும் 5-ஆம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து கொண்டு பேரணி செல்வேன் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் பேசிய அழகிரி , தன்னை திமுகவில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று 10-ஆவது நாளாக மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்திய அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் கருணாநிதியின் மகன். நான் சொன்னதையே செய்வேன். வரும் 5-ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை அழைத்து கொண்டு பேரணி வருவேன் என்றார்.
மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியும் அழைப்பு ஏதும் வந்த பாடில்லையே என்ற செய்தியாளர் கேள்விக்கு,
அது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என மு.க. அழகிரி பதிலளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications