கவனிப்பாரின்றி தத்தளிக்கும் கருணாநிதியின் "தலைமகன்" மு.க.முத்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து கவனிக்க யாருமின்றி, அடைக்கலம் தர யாருமின்றி நண்பர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ள அவலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கருணாநிதி குடும்பத்தார் யாருமே மு.க.முத்துவை கண்டு கொள்ளவில்லையாம். அவருக்கு சிகிச்சைக்கான செலவுக்குக் கூட யாரும் பணம் கொடுக்கவில்லையாம். கருணாநிதி குடும்பத்தார் சகல வசதிகளோடு வாழ்ந்து வரும் நிலையில் அவருடைய மூத்த மகன் இப்படி சென்னையில் அனாதை போல கைவிடப்பட்டிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

மு.க.முத்து கருணாநிதியால் நடிகராக்கப்பட்டவர். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக இறக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. சில படங்களில் நடித்த இவர் பாடகரும் ஆவார். முன்பு சென்னையில் வசித்து இவர் காலப்போக்கில் கருணாநிதி குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டார். அதற்கு ஜெயலலிதாவிடம் போய் இவர் நிதியுதவி பெற்றதே காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது கருணாநிதி குடும்பம் இவரை முற்றிலும் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. திருவாரூரில் வசித்து வந்த மு.க.முத்து தற்போது நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். அரசு மருத்துவமனையில் சாதாரண நோயாளி போல வைத்துப் பார்த்தனர். முடியவில்லை. சென்னைக்குக் கொண்டு வந்து நண்பர்கள் கொடுத்த பணத்தை வைத்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சற்று பரவாயில்லை என்ற போதிலும் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமாம்.
டிஸ்சார்ஜ் ஆன அவரை எங்கு கூட்டிக் கொண்டு போவது என்று தெரியாமல் தத்தளித்தார் மனைவி சிவகாம சுந்தரி. அவர்களது பரிதாப நிலையைப் பார்த்து வேதனைப்பட்ட நண்பர் ஒருவர் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.
"கோபாலபுரம்" கைவிட்டு விட்ட நிலையில் நண்பரின் அடையாறு இல்லத்தில் தங்கியுள்ளார் மு.க.முத்து.












Click it and Unblock the Notifications