இளைஞர்கள் பங்களிப்போடு தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற ஸ்டாலின் வாழ்த்து
இளைஞர்களின் பங்களிப்போடு தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற வேண்டும் என்று குடியரசு தினமான இன்று ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இன்று விருதுகள் பெற்ற அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவி
சென்னை: மெரினாவில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மகிழ்ச்சியை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது இளைஞர்களின் பங்களிப்போடு தமிழகம் அபரிமித வளர்ச்சி காண வேண்டும் என்ற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பிலான 68வது குடியரசு தின விழாவில் இன்று பங்கேற்றேன். நாட்டின் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகதன்மையே இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயக பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்று, அகில உலகத்திற்கே வழி காட்டும் வகையில் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்தி தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை வென்று எடுத்த மெரினா கடற்கரையில் குடியரசு தின அணி வகுப்பு காட்சிகளை கண்டு ரசித்தேன்.
தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்புடம் தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற்று "அனைவரும் அனைத்து வசதிகளும்" பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த குடியரசு தினத்தில் அனைவருக்கும் என் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications