தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார்.
மதுரை: விரைவில் ஆட்சி கலையும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது பலிக்காது; தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய அளவில் மதுரை மாநகரம் தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே மதுரை மாநகரத்தில் சுத்தம், சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டியது, அனைவரின் கடமையாகும்.
தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது. தமிழக அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தி உள்ளார். திமுக தலைவர் கருணாநிதியால் கூட அதிமுக அரசை அசைக்க முடியாது. அப்படி இருக்கும் போது மு.க.ஸ்டாலினால் எப்படி முடியும்?
அரசை கவிழ்ப்பேன் என்று நகைச்சுவை நடிகர் போல் ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுக ஆட்சி நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications